‘மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்’ : இந்தியாவின் மொத்த பாதிப்பு விவரம் இதோ!

 

‘மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்’ : இந்தியாவின் மொத்த பாதிப்பு விவரம் இதோ!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து வந்தாலும், கொரோனா இரண்டாம் கட்ட அலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், மக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடனும் விழுப்புணர்வுடனும் பயணம் செய்யுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவலும், கொரோனா மரணங்களும் குறைந்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

‘மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்’ : இந்தியாவின் மொத்த பாதிப்பு விவரம் இதோ!

இந்த நிலையில், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 90,50,598 ஆக அதிகரித்துள்தாகவும் ஒரே நாளில் 564 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,32,726 ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனாவில் இருந்து 84,78,124 பேர் குணமடைந்ததால் தற்போது 4,39,747 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.