Home அரசியல் அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் இரட்டை தலைமை!

அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் இரட்டை தலைமை!

திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் இரட்டை தலைமை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 2500 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தான் அதிக அளவு பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருந்தது. அதன் படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Corona

இதனிடையே, தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் கூட்டம் அதிகளவு கூடுவதால் வைரஸ் பரவல் பன்மடங்கு அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானது. இந்த நிலையில், திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது அதிமுக தலைமையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் இரட்டை தலைமை!

அதிமுக வேட்பாளர் இந்திரா காந்தியின் கணவர் தங்கமணிக்கு ஏற்கனவே கொரோனா உறுதியாகி இருந்தது. அவரின் மூலம் இந்திரா காந்திக்கும் தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அண்மையில், திருச்சியில் நடந்த பிரச்சாரத்தில் இந்திரா காந்தியுடன் 7 அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் இரட்டை தலைமை!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கொரோனாவால் இறந்த மூதாட்டி : தகனம் செய்வதற்கு முன் எழுந்ததால் அதிர்ச்சி!

கொரோனா தொற்றால் இறந்ததாக மூதாட்டி ஒருவரை தகனம் செய்ய சென்ற போது எழுந்து உட்கார்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நிவாரண நிதி வழங்கிய ராஜீவ் காந்தி கொலையில் கைதாகிய ரவிச்சந்திரன்!

கொரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இந்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் பொதுமக்களின் பங்களிப்பை வழங்கும்படி அரசு கோரிக்கை...

கொரோனாவில் இருந்து மீண்டாலும் புதிய நோய்த்தொற்று அபாயம்… பகீர் கிளப்பும் சுகாதாரத்துறை செயலர்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் சூழலில், கடந்த சில நாட்களாக கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா மூன்றாம்...

அடுத்த வாரம் அறிமுகமாகிறது தண்ணீரில் கலந்துகுடிக்கும் கொரோனா மருந்து!

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிவருகிறது. கடந்த வாரம் முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டிச் சென்றது. தற்போது பல்வேறு மாநிலங்களில் முழு...
- Advertisment -
TopTamilNews