கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 நாளில் 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக எகிறியது….

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 நாளில் 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக எகிறியது….

2019 இறுதியில் சீனாவில் உருவான தொற்று நோயான கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல மற்ற நாடுகளிலும் பரவ தொடங்கியது. நம் நாட்டில் கடந்த ஜனவரியில் இறுதியில் கேரளாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் மார்ச் மாத தொடக்கத்தில்தான் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியது. இதனையடுத்து அந்த மாதம் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 நாளில் 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக எகிறியது….

இருப்பினும் கொரோனா வைரஸ் பரவி கொண்டேதான் இருக்கிறது. கடந்த மாதம் 18ம் தேதியன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தொட்டது. ஆனால் அதற்கு அடுத்த 15 நாளான நேற்று முன்தினம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது கொரோனா வைரஸ் பரவல் சமூக பரிமாற்றம் நிலைக்கு சென்று விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 நாளில் 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக எகிறியது….

ஆனால், நோயை கட்டுப்படுத்துவதற்கான தனது தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மத்திய அரசு கூறுகிறது. மேலும் குறைந்த இறப்பு விகிதத்தையும், கொரோனா பாதிப்பு இரு மடங்கு அதிகரிப்பதற்கான எடுத்து கொள்ளும் காலத்தையும் அதற்கு மேற்கோள் காட்டுகிறது. இந்தியாவில் இன்னும் சமூக பரிமாற்றம் நடைபெறவில்லை எனவும் தொடர்ந்து கூறிவருகிறது