’கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. ஆனால்…’ என்ன சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்

 

’கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. ஆனால்…’ என்ன சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 13 லட்சத்து  54 ஆயிரத்து 689 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 5 நாட்களுக்குள் 13 லட்சம் அதிகரித்து விட்டது.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 63 ஆயிரத்து 353 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.  

’கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. ஆனால்…’ என்ன சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்

உலகமே கொரோனா பிரச்னை எப்போது தீரும் எனக் காத்திருக்கிறது. இந்தியாவும் உலகளவில் அதிக பாதிப்பு அடைந்த நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

ரஷ்யா நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி கண்டறியப்பட்டு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் முக்கியமான தகவலைக் கூறியுள்ளது.

’கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. ஆனால்…’ என்ன சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்
Vasant Narasimhan, PC:wikipedia

விஞ்ஞானி வசந்த் நரசிம்மன் உலக சுகாதார அதிகாரியாக உள்ளார். அவர் பேசுகையில், ‘கொரோனா வைரஸை ஒழிக்கும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகக்கூடும். அதுவரை நோயைப் பரப்பும் கொரோனா வைரஸை முற்றிலுமா ஒழிக்க முடியாது. மருந்து கண்டுபிடிக்கும் வரை கொரோனா வைரஸின் வீரியத்தைக் குறைக்கலாம். இந்த வைரஸ் மட்டுமல்ல. சின்னம்மை வைரஸைத் தவிர வேறு எந்த வைரஸூம் மனிதர்களால் முற்றிலுமாக ஒழிக்கப்பட வில்லை’ என்கிறார்.

கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்து, கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதே கொரோனா நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவும்.