திருட்டுப் போன கொரோனா தடுப்பூசி மருந்துகள்… அதிர்ச்சியில் சுகாதாரத்துறை!

 

திருட்டுப் போன கொரோனா தடுப்பூசி மருந்துகள்… அதிர்ச்சியில் சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்னர், நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் ஒரு லட்சத்தை எட்டியது. இதைத்தொடர்ந்து, இன்று இதுவரை இல்லாத அளவாக 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தைக் கடந்துள்ளது.

திருட்டுப் போன கொரோனா தடுப்பூசி மருந்துகள்… அதிர்ச்சியில் சுகாதாரத்துறை!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டு வரும் சூழலிலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படுவது அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸை எதிர்த்து போராட தடுப்பூசி செலுத்தும் பணியை அந்தந்த மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

திருட்டுப் போன கொரோனா தடுப்பூசி மருந்துகள்… அதிர்ச்சியில் சுகாதாரத்துறை!

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 320 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்து திருடுப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாஸ்திரி நகரில் இருக்கும் கன்வட்டியா அரசு மருத்துவமனை கடந்த செவ்வாய்க் கிழமை இரவு மருந்துகள் திருடப்பட்டதாக அம்மருத்துவமனை ஊழியர்கள் புகாரளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை திண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இது போன்ற திருட்டு சம்பவங்கள் அரங்கேறுவது சுகாதாரத்துறையினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.