இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி – ரஷ்யா புதிய தகவல்

 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி – ரஷ்யா புதிய தகவல்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகமே தடுமாறி வருகிறது. சில நாடுகளில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைவது போல இருந்தாலும், பல நாடுகளில் இரண்டாம் அலையை வீசத் தொடங்கி விட்டது கொரோனா.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 13 லட்சத்து 08 ஆயிரத்து 613 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 23 லட்சத்து 96 ஆயிரத்து 651 நபர்கள்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி – ரஷ்யா புதிய தகவல்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 37 ஆயிரத்து 840 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,74,74,122 பேர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலையை நோக்கிச் செல்கிறது உலகம். பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆய்வுகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி – ரஷ்யா புதிய தகவல்

ரஷ்யாவைச் சேர்ந்த கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் (Gamaleya Reserch Institue) தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தி வெற்றிகரமாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்தது. கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 12-ம் தேதியே பதிவும் செய்தது. ஸ்புட்னிக் v எனும் பெயரிட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஸ்புட்னிக் v மருந்தை உலகின் பல நாடுகளில் தயாரிக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 10 டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்க முடிவெடித்திருப்பதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது.