’பாதுகாப்பு அமைச்சருக்கு தடுப்பூசி’ – அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி

 

’பாதுகாப்பு அமைச்சருக்கு தடுப்பூசி’ – அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி

கொரோனா எனும் ஒற்றை வார்த்தை உலகையே மிரட்டி வருகிறது. உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடுகளும்கூட நோய்த் தொற்றைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று போராடி தோற்றே போனது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 31 லட்சத்து 90 ஆயிரத்து 663 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 13 லட்சத்து 24 ஆயிரத்து 906 நபர்கள்.

’பாதுகாப்பு அமைச்சருக்கு தடுப்பூசி’ – அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 27 ஆயிரத்து 904 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,02,37,853 பேர்.

கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். இப்போது வரை 3 லட்சத்து 8 ஆயிரம் பேரைப் பலி வாங்கியிருக்கிறது கொரோனா. அதனால், உடனே கொரோனா தடுப்பூசி தேவை எனும் நிலைக்கு வந்துவிட்டது அமெரிக்கா.

’பாதுகாப்பு அமைச்சருக்கு தடுப்பூசி’ – அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி

அதன் சூழலை உணர்ந்த அமெரிக்க அரசு, ஃபைசர் கொரோனா தடுப்பூசியை அவசரக்காலப் பயன்பாட்டுக்குச் செலுத்த முடிவெடுத்துள்ளது. அதன்படி நேற்று அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டோபர் மில்லர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அது ஒருவகையில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 50 மாகாணங்களுக்கும் 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்த வாரத்திற்குள் அனுப்ப அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.