இலவசமாக கொரோனா தடுப்பூசி… அமெரிக்காவின் அதிரடி

 

இலவசமாக கொரோனா தடுப்பூசி… அமெரிக்காவின் அதிரடி

கொரோனா நோய்த் தொற்றால் உலகம் கடந்த 9 மாதங்களாக படாத பாடு பட்டு வருகிறது. அதிலிருந்து மீளமுடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன.

உலகே வியக்கும் வல்லரசு நாடான அமெரிக்காவில் இன்றைய தேதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54 லட்சத்து 15 ஆயிரத்து 666. நேற்று மட்டும் அதிகரித்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 55,364. நோயால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

இலவசமாக கொரோனா தடுப்பூசி… அமெரிக்காவின் அதிரடி

அதனால் கொரோனா தடுப்பு மருந்து உடனே தேவைப்படும் பட்டியலில் அமெரிக்காவும் இருக்கிறது.

இந்நிலையில் ரஷ்யா ஸ்புட்னிக் எனும் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்துவிட்டது. ஆனாலும் சில நாட்டு விஞ்ஞானிகள், ’உயிர்காக்கும் மருந்து கண்டுபிடிப்பதில் ஏன் காட்டுகிறது ரஷ்யா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இலவசமாக கொரோனா தடுப்பூசி… அமெரிக்காவின் அதிரடி

ரஷ்யா கண்டறிந்த மருந்து அமெரிக்காவில் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அமெரிக்காவின் சுகாதாரத் துறை அதிகாரி பெளல் மாங்கோ, ‘கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு ஊசி முறையாகப் பரிசோதனை செய்யப்படும். மக்களுக்குச் செலுத்தப்படும் தடுப்பூசியின் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்’ என்று தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் மற்றொரு சுகாதரத் துறை அதிகாரி, ரஷ்யா உருவாக்கியிருக்கும் தடுப்பூசி பாதுகாப்பானது என்றே நான் நம்புகிறேன். இருந்தாலும் நோயைத் தடுக்கும் அளவுக்கான சக்தி வாய்த மருந்தை உருவாக்கி விட்டார்களா… என்ற சந்தேகமும் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இலவசமாக கொரோனா தடுப்பூசி… அமெரிக்காவின் அதிரடி

அமெரிக்காவும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க நிறைய செலவழித்து வருகிறது. அவை இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பரிசோதனைகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.