இந்தியாவில் 49.59 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

 

இந்தியாவில் 49.59 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

நாடு முழுவதும் இதுவரை 49,59,445 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 49.59 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டிய இந்தியா, குறுகிய காலக்கட்டத்தில் 2 தடுப்பூசி கண்டுபிடித்து முன்னோடியாக திகழ்கிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. நாளொன்றுக்கு ஒரு மையத்தில் 100 பேர் வீதம், ஒரு நாள் இடைவெளிவிட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் மக்களுக்கு செலுத்தப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 49.59 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,408 பேருக்கு கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட 120 உயிரிழப்புகளால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,54,823 ஆக அதிகரித்திருப்பதாகவும் தற்போது 1,51,460 பேருக்கு மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இன்று கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.