நாடு முழுவதும் 23.55 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

 

நாடு முழுவதும் 23.55 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

இந்தியாவில் இதுவரை 23.55 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 23.55 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் மிக சிறந்த நாடாக விளங்கும் இந்தியா, குறைந்த காலகட்டத்திலேயே இரண்டு தடுப்பூசிகளை கண்டுபிடித்திருக்கிறது. தனது நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதோடு பிற நாடுகளுக்கும் விநியோகம் செய்து வருகிறது. கடந்த 16ம் தேதி இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், நாடு முழுவதிலும் இருக்கும் 3000 மையங்களில் சேர்த்து இதுவரை 23,55,979 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கிறது. முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்தவுடன், விரைவில் பொதுமக்களுக்கு போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் 23.55 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,666 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,07,01,193 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,53,847 ஆக அதிகரித்துள்ளதாகவும் 14,301 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தற்போது 1,73,740 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதில் இருந்தே, பாதிப்பு கணிசமாக குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.