6 நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

 

6 நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

இந்தியா இன்றளவும் உலக அளவில் அதிக அளவில் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையை பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ், ஜனவரி 22ம் தேதி காலை 7 மணி வரை சுமார் 10.5 லட்சம் பேர் (10,43,534) தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 4,049 இடங்களில் 2,37,050 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

6 நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து விட்டது. தெலுங்கானாவில் இன்று ஒரு லட்சத்தைக் கடந்துவிடும். தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 42,947.

கொரோனா பரிசோதனையின் மொத்த எண்ணிக்கை 19 கோடியைக் (19,01,48,024) கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,00,242 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

6 நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், இந்தியாவில் கொரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவிகிதம் 1.78 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,88, 688.

கடந்த 24 மணி நேரத்தில் 18,002 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கடந்த 24 மணி நேரத்தில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 3,620 குறைந்துள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,02,83,708-ஆக உள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி 1,00,95,020 (54.5 மடங்கு)-ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் 96.78 சதவீதமாக உள்ளது.

6 நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,334 பேருக்கும், மகாராஷ்டிராவில் 2,886 பேருக்கும், கர்நாடகாவில் 674 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.