மார்ச், ஏப்ரல் மாதத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகம்?

 

மார்ச், ஏப்ரல் மாதத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகம்?

இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

மார்ச், ஏப்ரல் மாதத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகம்?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வந்தாலும் கூட, இரண்டாம் கட்ட அலையில் கொரோனா இருப்பதால் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசுக்கு, இதுவரை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட அனைத்து நாடுகள் கண்டுபிடித்த கொரோனா எதிர்ப்பு மருந்துகளும் இரண்டாம் கட்ட அல்லது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன.

மார்ச், ஏப்ரல் மாதத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகம்?

தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியும், கொரோனா குறித்த அச்சுறுத்தல் மக்கள் மத்தியில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பு மருந்து விநியோகம் செய்யப்படுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் அடுத்த மார்ச், ஏப்ரலில் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய முடியும் என நம்புவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.