கொரோனா தடுப்பூசி: இறுதி கட்ட பரிசோதனையை செளதியில் நடத்துகிறது சீனா

 

கொரோனா தடுப்பூசி: இறுதி கட்ட பரிசோதனையை செளதியில் நடத்துகிறது சீனா

கொரோனா இல்லாத பழைய நிலைக்கு என்றைக்கு உலகம் திரும்பும் என்று தெரியவில்லை. ஏனெனில், ஒவ்வொரு நாளும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.

லாக்டெளன் உள்ளிட்ட பல முயற்சிகளை அந்தந்த நாட்டு அரசுகள் எடுத்தும் நோய்த் தொற்றுவதையும் பரவுவதையும் முற்றிலுமாக நிறுத்த முடியவில்லை.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. ஆயினும் அதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கொரோனா தடுப்பூசி: இறுதி கட்ட பரிசோதனையை செளதியில் நடத்துகிறது சீனா

ரஷ்யாவைச் சேர்ந்த கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் (Gamaleya Reserch Institue) தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தி வெற்றிகரமாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி இந்தத் தடுப்பூசியை பதிவு செய்ய விருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சீனா நாட்டின் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட கிளினிகல் பரிசோதனைக்குத் தயாராகி வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

சீனா நாட்டின் கேன்சைனோ பயாலஜிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பல கட்டங்களில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் மற்றும் இறுதி கட்ட கிளினிகல் சோதனையை செளதி அரேபிய நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி: இறுதி கட்ட பரிசோதனையை செளதியில் நடத்துகிறது சீனா

சீனா உருவாக்கிய இந்தத் தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை சிலி, ரஷ்யா, செளதி அரேபியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் மனிதர்களின் உடலில் செலுத்த முடிவு செய்திருந்தது.

தற்போது ரியாத, மக்கா உள்ளிட்ட செளதி அரேபியா நகரங்களில் சீனாவின் தடுப்பூசி இறுதிகட்ட சோதனை நடைபெறும் என செளதி நாட்டு அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி: இறுதி கட்ட பரிசோதனையை செளதியில் நடத்துகிறது சீனா

இன்னும் பல நாடுகளில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு மருந்துகளின் சோதனைகள் அடுத்தடுத்து வெளிவரும் எனத் தெரிகிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் கொரோனா தடுப்பு மருந்து வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலை மாறி இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரக்கூடும் எனத் தெரிகிறது.