கொரோனா தடுப்பு மருந்து – விநியோகிக்க தயாராகும் விமான நிலையங்கள்!

 

கொரோனா தடுப்பு மருந்து – விநியோகிக்க தயாராகும் விமான நிலையங்கள்!

இந்தியாவின் விமான நிறுவனங்களும், விமான நிலையங்களும் அடுத்த சில மாதங்களுக்கு பரபரப்பாக இயங்க உள்ளன. குறிப்பாக கொரோனா தடுப்பு மருந்து கண்டறிய முயற்சி 95 சதவீதம் வெற்றி கண்டுள்ள நிலையில், மருந்து உற்பத்தி, விநியோக கட்டமைப்பை மேம்படுத்த நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
தடுப்பு மருந்தை தகுந்த பாதுகாப்புடன் தேவையான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு விமான நிலையங்களும், விமான நிறுவனங்களும் தகுந்த கட்டமைப்பு உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விமான நிலையங்கள் சரக்கு விமானங்களை அதிக அளவில் கையாள வேண்டிய புதிய தேவை உருவாகியுள்ளதாக , இந்தியாவில் முக்கிய விமான நிலையங்களை நடத்தி வரும் ஜிஎம்ஆர் குழுமம் கூறியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து – விநியோகிக்க தயாராகும் விமான நிலையங்கள்!

மருந்துகளை குறிப்பிட்ட நேரத்துக்கு கொண்டு பாதுகாப்பது, உரிய டெம்பரேச்சருடன் வைப்பது என்கிற தேவைகளுக்கு ஏற்ப பல வசதிகளை உருவாக்கி வருவதாக கூறியுள்ளனர் சரக்கு விமானங்களை கையாள்வதன் மூலம் உலகம் முழுவதும் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக உள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 10,000 சரக்கு விமானங்கள் மூலம் 80 ஆயிரம் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இந்த நிலையில் தடுப்பு மருந்து கையாளவதில் ஸ்பைஸ்ஜெட் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தடுப்பு மருந்து வினியோக நடவடிக்கைகளில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் , ஜிஎம்ஆர் குழுமமும் இணைந்து செயல்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.