உச்ச நீதிமன்றத்தில் பல ஊழியர்களுக்கு கொரோனா…அதிர்ச்சியில் நீதிபதிகள்

 

உச்ச நீதிமன்றத்தில் பல ஊழியர்களுக்கு கொரோனா…அதிர்ச்சியில் நீதிபதிகள்

கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்து வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு எடுத்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் பல ஊழியர்களுக்கு கொரோனா…அதிர்ச்சியில் நீதிபதிகள்

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் நேற்றுமுதல் நான்கு நாட்களுக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தியாவில் ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 904 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 75 ஆயிரத்து 86 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 92 ஆயிரத்து 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் பல ஊழியர்களுக்கு கொரோனா…அதிர்ச்சியில் நீதிபதிகள்

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் பல ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்தே காணொளி மூலம் இன்று வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு எடுத்துள்ளனர். பல ஊழியர்களுக்கு கொரோனா வந்ததால் பாதுகாப்பு கருதி வழக்குகளில் விசாரிக்க முடிவு எடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற ஊழியர்களில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நேரிடையாக முறையிடும் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.