தபால் ஊழியருக்கு கொரோனா : மூடப்பட்ட துணை தபால் அலுவலகம்!

அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் உள்ள தனுஷ்கோடியாபுரம் தெருவை சேர்ந்த 56 வயதான தபால் ஊழியர் ஒருவர் கடந்த 7 ஆம் தேதி சென்னையில் ஒரு துக்க நிகழ்ச்சிக்காக வந்துவிட்டு கோவில்பட்டிக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சுகாதாரத் துறையினர் நேற்று தபால் ஊழியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதையடுத்து அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Coronavirus

மேலும் அவர் சென்னைக்கு வந்து திரும்பிய போது அலுவலகம் சென்றுள்ளார். இதனால் அவருடன் பணிபுரியும் 4 நபர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அத்துடன் துணை தபால் அலுவலகத்தினை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Most Popular

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அபிஷேக் பச்சன்!

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். இத்தகவலை அவர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் சூப்பர்...

பழனி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாருக்கு கொரோனா

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமாருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திமுக மாநில...