’கண்ணான கண்ணே..’திருமூர்த்திக்கு கொரோனா! சக நோயாளிகளின் கவலையை போக்க பாட்டு!

’கண்ணான கண்ணே..’திருமூர்த்திக்கு கொரோனா! சக நோயாளிகளின் கவலையை போக்க பாட்டு!

கண்ணான கண்ணே பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தாலும் அப்பாடலைச்சொன்னவுடன் பலருக்கும் நினைவுக்கு வருபவர் திருமூர்த்தி.
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண் பார்வை மட்டுமல்லாது தாய், தந்தையையும் இழந்த மாற்றுத்திறனாளி திருமூர்த்தி பல குரலில் பாடுவதில் வல்லமை பெற்றவர். பல காலமாக இவர் பாடி வந்தாலும், கண்ணான கண்ணே பாடலை இவர் பாடியது, அஜித் ரசிகரின் மூலமாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. உலகம் முழுவதும் இவரை தமிழர்கள் கொண்டாடினர். இப்பாடலுக்கு இசையமைத்த இமானே திருமூர்த்தியை அழைத்து, ஜீவா நடிப்பில் தான் இசையமைத்த படத்தில், ‘செவ்வந்தியே..’எனும் பாடலை பாட வைத்தார்.

’கண்ணான கண்ணே..’திருமூர்த்திக்கு கொரோனா! சக நோயாளிகளின் கவலையை போக்க பாட்டு!

கொரோனா தொற்று அவருக்கு உறுதியாகி இருக்கும் நிலையில், தற்போது திருமூர்த்தி பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி கொரொனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

’கண்ணான கண்ணே..’திருமூர்த்திக்கு கொரோனா! சக நோயாளிகளின் கவலையை போக்க பாட்டு!

அங்கு திருமூர்த்தி, பிளாஸ்டிக் குடம், தகர டப்பாக்களை அடித்து பாட்டுப்பாடி சிகிச்சை மையத்தில் இருப்போரின் கவலையை போக்கி வருகிறார்.