பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா: பள்ளி மூடல்!

 

பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா: பள்ளி மூடல்!

சேலம் அருகே பள்ளிக்கு சென்ற மாணவனுக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால், பள்ளி மூடப்பட்டுள்ளது.

சேலம் கருமந்துறை அருகே, கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊருக்கு சென்றதாகவும் அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இன்று முடிவு பாசிட்டிவ் என வந்திருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா: பள்ளி மூடல்!

இது குறித்து பேசிய ஆட்சியர், கொரோனா உறுதியான மாணவருக்கு பள்ளியில் இருந்து தொற்று பரவவில்லை. சம்பந்தப்பட்ட மாணவர் ஊருக்கு சென்று விட்டு பள்ளிக்கு வந்துள்ளார். ஊரில் தான் அவருக்கு கொரோனா பரவியுள்ளது. பள்ளியை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. அவருடன் தொடர்பில் இருந்த 36 மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா: பள்ளி மூடல்!

மேலும், பள்ளி சுத்தப்படுத்தும் பணிகள் முடிவடைந்து வரும் திங்கள் கிழமை பள்ளி திறக்கப்படும் என்றும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.