கொரோனா பரிசோதனை : இலங்கையில் மேலும் 5 மருத்துவமனைகளுக்கு அனுமதி

 

கொரோனா பரிசோதனை : இலங்கையில் மேலும் 5 மருத்துவமனைகளுக்கு அனுமதி

கொரோனா அச்சுறுத்தல் உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது. மற்ற அனைத்துப் பிரச்சனைகளையும் மறந்து கொரோனாவிலிருந்து விடுபவது எப்படி என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது நாடுகள்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 73 லட்சத்து 93 ஆயிரத்து 283 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 65 லட்சத்து 84 ஆயிரத்து 229 நபர்கள்.

கொரோனா பரிசோதனை : இலங்கையில் மேலும் 5 மருத்துவமனைகளுக்கு அனுமதி

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 15 லட்சத்து 41 ஆயிரத்து 747 பேர். 15 லட்சத்தைக் கடந்து விட்டது மரணங்களின் எண்ணிக்கை. தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,92,67,307 பேர்.

இலங்கையில் கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளால் கொரோனா முதல் அலையில் அதிக பாதிப்பு இல்லாமல் தப்பித்தது. ஆனால், இரண்டாம் அலையில் பெரும் எண்ணிக்கையில் புதிய நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.

இலங்கையில் இன்றைய தேதி வரை 27,877 பேருக்குக் கொரோனா தொற்று பாதித்துள்ளது. அவர்களில் 20,460 பேர் சிகிச்சையால் குணம் பெற்று வீடு திரும்பினர். 140 பேர் இறந்து விட்டனர்.

கொரோனா பரிசோதனை : இலங்கையில் மேலும் 5 மருத்துவமனைகளுக்கு அனுமதி

இப்போதைய நிலையில் இலங்கையில் தினந்தோறும் 14,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதனை அதிகரிக்கும் விதமாக கூடுதலாக 5 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ய அனுமதி அளித்துள்ளது இலங்கை அரசு.

இதன்மூலம் கூடுதலான நபர்களுக்கு தினமும் பரிசோதனை செய்யப்பட்டு, நோயாளிகள் கண்டறியப்படுவார்கள். அதனால், அவர்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.