இனிமேல் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கொரோனா பரிசோதனை செய்யலாம்!

 

இனிமேல் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கொரோனா பரிசோதனை செய்யலாம்!

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை எட்டியுள்ளது. அதில் 31 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், எஞ்சியுள்ளவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பாதிப்பு அதிகமாக இருந்தாலும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அன்லாக் செயல்பட்டு வருகிறது.

இனிமேல் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கொரோனா பரிசோதனை செய்யலாம்!

இந்த கொடிய வகை கொரோனா நோயில் இருந்து மக்களை காக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இதனிடையே பல மாநிலங்களில் பொது போக்குவரத்து சேவை தொடங்கியிருப்பதால் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. அதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது விருப்பமுள்ளவர்கள், பயணம் செய்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.