கோயில்களில் முகாமிட்ட அதிகாரிகள்… பக்தர்களை அழைத்து அதிரடி சோதனை!

 

கோயில்களில் முகாமிட்ட அதிகாரிகள்… பக்தர்களை அழைத்து அதிரடி சோதனை!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக இருப்பதால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோயில்களில் முகாமிட்ட அதிகாரிகள்… பக்தர்களை அழைத்து அதிரடி சோதனை!

ஒரு பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அந்த பகுதியை தகடுகள் மூலம் அடைக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதன்படி காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் 25 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிக்குள் யாரும் நுழையாத வண்ணம் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

கோயில்களில் முகாமிட்ட அதிகாரிகள்… பக்தர்களை அழைத்து அதிரடி சோதனை!

காஞ்சிபுரம் நகராட்சியில் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இரண்டாம் அலை வேகமாக பரவ வாய்ப்பிருப்பதால் பரிசோதனை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் புகழ்பெற்ற கோவில்களில் முகாமிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், பக்தர்களை அழைத்து அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி நடத்தப்படும் சோதனையில் பலருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.