2.5 கோடியைத் தொடவிருக்கும் கொரோனா பாதிப்பு #CoronaUpdates

 

2.5 கோடியைத் தொடவிருக்கும் கொரோனா பாதிப்பு #CoronaUpdates

இன்றைய (ஆகஸ்ட் 28) காலை நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.  

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 48 லட்சத்து  88 ஆயிரத்து 299 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 19 நாட்களுக்குள் 48 லட்சம் அதிகரித்து விட்டது.  

2.5 கோடியைத் தொடவிருக்கும் கொரோனா பாதிப்பு #CoronaUpdates

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 72 லட்சத்து 76 ஆயிரத்து 321 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 40 ஆயிரத்து 431 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

2.5 கோடியைத் தொடவிருக்கும் கொரோனா பாதிப்பு #CoronaUpdates

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 60,94,522 பேரும், பிரேசில் நாட்டில்  38,12,605 பேரும் இந்தியாவில் 34,63,972 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  

இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது. நேற்று மட்டும் 76,472 பேர் புதிய நோயாளிகளாக இந்தியாவில் உறுதி செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த சில வாரங்களாக கொலம்பியா, பெரு, மெக்சிகோ, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.