நேற்று 1000 பேருக்கும் அதிகமானவர்கள் இறந்த 3 நாடுகள் இவைதான்!#CoronaUpdates

 

நேற்று 1000 பேருக்கும் அதிகமானவர்கள் இறந்த 3 நாடுகள் இவைதான்!#CoronaUpdates

இன்றைய (ஆகஸ்ட் 19) காலை நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 23 லட்சத்து  07 ஆயிரத்து 265 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 8 நாட்களுக்குள் 23 லட்சம் அதிகரித்து விட்டது.

நேற்று 1000 பேருக்கும் அதிகமானவர்கள் இறந்த 3 நாடுகள் இவைதான்!#CoronaUpdates

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 50 லட்சத்து 47 ஆயிரத்து 783 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 84 ஆயிரத்து 353 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.

கொரொனாவினால் நேற்று மட்டும் மூன்று நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில், 1,358 பேரும், பிரேசில் நாட்டில் 1,365 பேரும், இந்தியாவில் 1,089 பேரும் நேற்றைக்கு மட்டும் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்.

நேற்று 1000 பேருக்கும் அதிகமானவர்கள் இறந்த 3 நாடுகள் இவைதான்!#CoronaUpdates

மெக்சிகோவில் 266 பேரும், கொலம்பியாவில் 247 பேரும் அர்ஜெண்டினாவில் 234 பேரும் நேற்று கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை.

ரஷ்யாவில் பெருமளவு இறப்பு எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் நேற்று 132 பேர் இறந்திருக்கிறார்கள். ரஷ்யாவில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டு விரைவில் வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி வரும் பட்சத்தில் இறப்பு எண்ணிக்கை வெகுவாக குறையும் என நம்பப்படுகிறது.