‘அறிகுறிகள் தென்படாதவர்களால்தான் அதிகம் கொரோனா பரவுகிறது’ உலக சுகாதார மையம்

 

‘அறிகுறிகள் தென்படாதவர்களால்தான் அதிகம் கொரோனா பரவுகிறது’ உலக சுகாதார மையம்

உலகின் நடவடிக்கையே கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என்று பிரித்துப் பார்க்கும்படி மாறிவிட்டது. அந்தளவுக்கு கொரோனாவின் ஆதிக்கம் மக்களை உலுக்கி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 20 லட்சத்து  49 ஆயிரத்து 452 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 7 நாட்களுக்குள் 20 லட்சம் அதிகரித்து விட்டது.

‘அறிகுறிகள் தென்படாதவர்களால்தான் அதிகம் கொரோனா பரவுகிறது’ உலக சுகாதார மையம்

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 56,12,027  பேரும், பிரேசில் நாட்டில்  33,63,235 பேரும் இந்தியாவில் 27,01,604 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி மட்டுமே எனும் நிலைமையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது உலகம்.

ரஷ்யா நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி கண்டறியப்பட்டு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘அறிகுறிகள் தென்படாதவர்களால்தான் அதிகம் கொரோனா பரவுகிறது’ உலக சுகாதார மையம்

இந்நிலையில் உலக சுகாதார மையம், ’20 முதல் 40 வயதுள்ளவர்களை கொரோனா வைரஸ் தாக்கும்போது அவர்களிடம் எவ்வித அறிகுறிகளும் தென்படுவதில்லை. அதனால், அவர்கள் இயல்பாக பல இடங்களுக்குச் செல்கிறார்கள். அதன்மூலம் பெரியவர்களுக்கும் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்களுக்கும் எளிதாகக் கொரோனா நோய்த் தொற்று பரவுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

எனவே சின்ன மாறுதல் நம் உடலில் தென்பட்டாலும் கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம் என்பது தெரிய வருகிறது.