இந்தியாவில் 80 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

 

இந்தியாவில் 80 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 80 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் கூட, நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்.30 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் மாநிலங்களுக்கு இடையே செல்ல எந்த வித கட்டுப்பாடுகளும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பண்டிகை காலம் நெருங்குவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் 80 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை நெருங்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 43,893 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 79,90,322 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 508 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,20,010 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், 72,59,509 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் 6,10,803 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.