குறையும் கொரோனா பாதிப்பு; இரண்டாம் அலையில் இருந்து மீள்கிறதா இந்தியா?!

 

குறையும் கொரோனா பாதிப்பு; இரண்டாம் அலையில் இருந்து மீள்கிறதா இந்தியா?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திடீரென அதிகரித்தது. இது மூன்றாவது அலைக்கான தொடக்கமா? என்று சுகாதாரத்துறை அஞ்சியது. குறிப்பாக, கேரளாவில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தது பீதியை அதிகரிக்கச் செய்தது. தற்போது கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படுவதன் விளைவாக இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது.

குறையும் கொரோனா பாதிப்பு; இரண்டாம் அலையில் இருந்து மீள்கிறதா இந்தியா?!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 219 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலமாக மொத்த உயிரிழப்புகள் 4,42,874 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 37,687 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,24,47,032 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தற்போது கொரோனாவுக்கு 3,74,269 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கொரோனா மூன்றாம் அலை உருவாகும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை தீவிரமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில், பாதிப்பு குறைவது இரண்டாம் அலையில் இருந்து இந்தியா மீள்வதையே உணர்த்துகிறது.