‘மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு’ : முக்கியத் தகவல் இதோ!

 

‘மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு’ : முக்கியத் தகவல் இதோ!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று 18 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி தயாராகி, மக்களுக்கு செலுத்தும் பணியும் தொடங்கி விட்டது. தடுப்பூசி போடப்பட்டாலும் மக்கள் மாஸ்க் அணிந்து, உரிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதாவது, மனித உடலில் தடுப்பூசி வேலை செய்ய 14 நாட்கள் ஆகும் என்பதால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் கூட பாதுகாப்புடனே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

‘மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு’ : முக்கியத் தகவல் இதோ!

ஆனால், தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்து மக்கள் மெத்தன போக்குடன் செயல்படுகிறார்கள் என்பதே உண்மை. நாடு முழுவதும் தற்போது இயல்பு நிலை திரும்பி இருக்கும் சூழலில், கூட்டம் கூடுவதும் மாஸ்க் அணியாமல் வெளியே செல்வதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 18,855 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,07,20,048 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல, ஒரே நாளில் 163 பேர் உயிரிழந்ததால் மொத உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,54,010 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

‘மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு’ : முக்கியத் தகவல் இதோ!

மேலும், இதுவரை 29,28,053 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்த நிலையில், இன்று கிட்டத்தட்ட 19 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.