இந்தியாவில் 78.14 லட்சம் பேருக்கு கொரோனா – முழு விவரம் இதோ!

 

இந்தியாவில் 78.14 லட்சம் பேருக்கு கொரோனா – முழு விவரம் இதோ!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால், கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், மக்களை காக்கும் பொருட்டு மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 78.14 லட்சம் பேருக்கு கொரோனா – முழு விவரம் இதோ!

அதில், ஒரே நாளில் 53,370 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 78.14 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 650 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,17,956 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 70.16 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குணமடைந்தோர் விகிதம் 89.78% ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.