வேளாண் குழுக்களுக்கு ரூ.29.50 லட்சம் சிறப்பு நிதி; துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

வேளாண் குழுக்களுக்கு ரூ.29.50 லட்சம் சிறப்பு நிதி; துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

தேனி

தேனி மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பினை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். இதனையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு, வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருட்கள் கொள்முதல் செய்ய மூலதன மானியமாக தலா 1.50 லட்சம் வீதம் மொத்தம் 18 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

வேளாண் குழுக்களுக்கு ரூ.29.50 லட்சம் சிறப்பு நிதி; துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

அதேபோல் குழுவாக இணைந்து தொழில்புரியும் 3 தொழில் குழுக்களுக்கு, மூலதன மானியமாக தலா 1.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4.50 லட்சம் ரூபாயும், ஒரு உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு 7 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், எம்எல்ஏ ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.