இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? – மத்திய அரசு சொல்வது இதுதான்

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? –  மத்திய அரசு சொல்வது இதுதான்

கொரோனாவின் கோரப்பிடியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாள்தோறும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்தே உள்ளன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 38 லட்சத்து  44 ஆயிரத்து 178 பேர்.    

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? –  மத்திய அரசு சொல்வது இதுதான்

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 51 லட்சத்து 48 ஆயிரத்து 403 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 12 ஆயிரத்து 659 பேர்.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 74,06,146 பேரும், இந்தியாவில் 62,25,763 பேரும், பிரேசில் நாட்டில்  47,80,317 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? –  மத்திய அரசு சொல்வது இதுதான்

இந்நிலையில் இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனாவின் பாதிப்பு நாட்டில் குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்களை வைத்துச் சொல்கிறது.

மொத்த பாதிப்புகளுடன் ஒப்பிடும் போதுதற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? –  மத்திய அரசு சொல்வது இதுதான்

நாட்டின் மொத்த பாதிப்புகளில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 15.11 சதவீதம் ஆகும் (9,40,441). ஆகஸ்டு 1 அன்று 33.32 சதவீதமாக இருந்த சிகிச்சை பெறுபவர்களின் விகிதம்தற்போது 15.11 சதவீதமாக இருக்கிறது. இரண்டு மாதங்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 86,428 நோயாளிகள் குணமடைந்த நிலையில்குணமடைந்தோரின் விகிதம் 83.33 சதவீதத்தை இன்று தொட்டுள்ளது. இது வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,87,825 ஆகும்.

தினமும் அதிக அளவிலான குணமடைதல்களை இந்தியா கண்டு வரும் நிலையில்புதிய பாதிப்புகளை விட குணமடைதல்கள் அதிகம் என்று பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தகவல் அளித்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? –  மத்திய அரசு சொல்வது இதுதான்

தினமும் குணமடைவோரின் சராசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் கடந்த சில நாட்களாக 90 ஆயிரத்தை தொட்டுள்ளது.

முழுமையான அணுகுமுறையின் மூலம் மத்திய அரசின் தலைமையிலான திட்டங்களை கவனத்துடனும்திறமையுடனும் செயல்படுத்திய காரணத்தால் குணமடைபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிக அளவில் உயர்ந்து வருகிறது.

பரிசோதனைகண்டறிதல்கண்காணிப்புசிகிச்சை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஐந்து அம்சங்களின் மீது கவனம் செலுத்தியதால் நாடு முழுவதும் சிறப்பான பலன் கிடைத்து வருகிறது.