புதிய கொரோனா நோயாளிகளில் சீனர்கள் இல்லை – சீனாவில் வியப்பு

 

புதிய கொரோனா நோயாளிகளில் சீனர்கள் இல்லை – சீனாவில் வியப்பு

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவின் வூகான் நகரில் முதன்முதலாகக் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. அது தற்போது உலகம் முழுக்க பரவி பல நாடுகளை உலுக்கி வருகிறது. அவற்றில் இந்தியாவும் ஒன்று.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 366 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 58 லட்சத்து 95 ஆயிரத்து 824 நபர்கள்.

புதிய கொரோனா நோயாளிகளில் சீனர்கள் இல்லை – சீனாவில் வியப்பு

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 27 ஆயிரத்து 780 பேர்.

சீனாவில் தற்போதைய நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 85,434 பேர். இவர்களில் 80,611 பேர் குணமடைந்து விட்டனர். 4,634 பேர் கொரோனாவுக்குப் பலியாகி விட்டனர். ஏப்ரல் 17-ம் தேதி மட்டும் அதிகப்பட்சமாக 1,290 பேர் இறந்திருகிறார்கள்.

புதிய கொரோனா நோயாளிகளில் சீனர்கள் இல்லை – சீனாவில் வியப்பு

தற்போது சிகிச்சையில் இருப்போர் 189 பேர் மட்டுமே. இவர்களில் 2 பேர் மட்டுமே தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று சீனாவில் 10 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் சீன நாட்டினைச் சேர்ந்த யாருக்கும் நேற்று நோய்த் தொற்று உறுதி செய்யப்பட வில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.