50 லட்சத்தைக் கடந்த பிரேசில் – நங்கூரமிட்ட கொரோனா

 

50 லட்சத்தைக் கடந்த பிரேசில் – நங்கூரமிட்ட கொரோனா

கொரோனாவின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிறதே தவிர குறைந்த பாடில்லை.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 63 லட்சத்து 94 ஆயிரத்து 365 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 74 லட்சத்து 41 ஆயிரத்து 718 நபர்கள்.

50 லட்சத்தைக் கடந்த பிரேசில் – நங்கூரமிட்ட கொரோனா

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 60 ஆயிரத்து 463 பேர்.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 77,76,224 பேரும், இந்தியாவில் 68,35,655 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

50 லட்சத்தைக் கடந்த பிரேசில் – நங்கூரமிட்ட கொரோனா

கொரோனாவின் பரவத் தொடங்கியது முதலே பிரேசிலில் பாதிப்பு அதிகம். தற்போது பிரேசிலில் பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்துவிட்டது.

இன்றைய தேதியில் பிரேசிலில் 50,02,357 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 45,91,424 பேர் குணமடைந்து விட்டனர். சிகிச்சை பலன் அளிக்காது 1,48,304 பேர் இறந்துவிட்டனர்.

50 லட்சத்தைக் கடந்த பிரேசில் – நங்கூரமிட்ட கொரோனா

பிரேசிலில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை உச்சம் தொட்டது ஜூலை 29 அன்றுதான். அன்றைக்கு மட்டுமே 70,896 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதமாக புதிய நோய்த் தொற்றின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது.