திருமண மண்டபங்களில் கொரோனா விதிமுறைகள் கட்டாயம்!

 

திருமண மண்டபங்களில் கொரோனா விதிமுறைகள் கட்டாயம்!

கேரளாவில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் கோவையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்களில் கொரோனா விதிமுறைகள் கட்டாயம்!

கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காக்காவிளை, களியக்காவிளை, நெட்டா சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதனை அதிகம் உள்ள பகுதிகளை தவிர்த்து பிற வழிகளில் மக்கள் பயணித்து வருகின்றனர். கேரளாவில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா 30 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.கேரளாவில் ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நாளை இரவு முதல் காலை 6 மணி வரை இனி இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ள நிலையில் தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருமண மண்டபங்களில் கொரோனா விதிமுறைகள் கட்டாயம்!

இந்நிலையில் கோவையில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த ஒரு வாரம் முன்பே வட்டாட்சியரிடம் அனுமதி பெறவேண்டும். 50 நபர்களுக்கு மிகாமல் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.