‘காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு 1 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி உதவி’ மத்திய அரசு

 

‘காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு 1 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி உதவி’ மத்திய அரசு

கொரோனா நோய்த் தொற்றால் எல்லாத் தொழில்களுமே முடங்கி விட்டன. தொழிலகங்கள் திறந்தாலும் தொழிலாளர்கள் வேலைக்கு வர முடியாத நிலை. குறிப்பாக, நெசவாளர்களின் நிலை மிகவும் கவலைக்கு உரியது. இந்த ஊரடங்கு காலத்தில் நெசவாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நிவாரணம் பற்றிய மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு 1 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி உதவி’ மத்திய அரசு

அந்த அறிக்கையில், ‘காஞ்சிபுரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டுறவு பட்டு நெசவுச் சங்கங்களின் விற்பனையகங்கள் இருக்கின்றன. தொழில்கள் இயந்திரமயமாவதற்கு முன் துணி உற்பத்தி கைத்தறி மூலமாகவே நடைபெற்றது. அனைத்திந்திய நான்காவது கைத்தறி கணக்கெடுப்பு 2019-20 இன்படி இந்தியாவில் 26 லட்சத்து 73 ஆயிரத்து 891 நெசவாளர்களும் அதன் துணை தொழில்களில் 8 லட்சத்து 48 ஆயிரத்து 621 தொழிலாளர்களும் என மொத்தமாக 35 லட்சத்து 22 ஆயிரத்து 512 பேர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அளவில் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களில் 72% பேர் பெண்கள் தான்.

தமிழ்நாட்டில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 574 கைத்தறி நெசவுத் தொழிலாளர்களும் புதுச்சேரியில் 1999 கைத்தறி நெசவுத் தொழிலாளர்களும் உள்ளனர். இவற்றில் பெரும்பாலோர் கைத்தறி நெசவு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்பார்கள். அமைப்பு சாராத கைத்தறி தொழிலாளர்களும் உபரியாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். நாட்டில் 67% கைத்தறி நெசவாளர்கள் மாத வருமானம் ரூபாய் ஐயாயிரத்திற்கும் குறைவாகவே பெறுகின்றனர். 26% நெசவாளர்கள் மாத வருமானமாக ரூபாய் ஐயாயிரத்துக்கு மேல் ஆனால் ரூபாய் பத்தாயிரத்துக்கும்கீழ் என்று பெறுகின்றனர். அதாவது 93% கைத்தறி நெசவாளர்களின் மாத வருமானம் ரூபாய் பத்தாயிரத்துக்குள்தான் இருக்கின்றது. இவர்களுக்கு வருமானம் குறைந்தால் வறுமைதான் வாழ்க்கையாகிவிடும்.

‘காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு 1 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி உதவி’ மத்திய அரசு

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலும் அதைத் தொடர்ந்த ஊரடங்குகளும் பல தொழில்களைப் பாதித்தது போலவே கைத்தறி தொழிலையும் பாதித்தது. வாழ்வாதாரத்துக்கான வருமானம் இல்லாமல் கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் பெரிதும் துன்பம் அடைந்தனர். இந்த நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் நிவாரண தொகுப்பை அறிவித்தது. இதில் அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு கோவிட்-19 நிவாரணத் தொகை அளிக்க வழிவகை செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பு சாராத கைத்தறி நெசவாளர்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) பா.லிங்கேஸ்வரன் தனது அலுவலகமானது தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவாளர்கள் நல வாரியத்தின் மூலமாக அமைப்பு சாராத 1814 நெசவுத் தொழிலாளர்களுக்கு தலா ரூ 2000 வீதம் ஒரு கோடியே 62 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் கோவிட்-19 நிதியுதவி அளித்துள்ளது எனத் தெரிவித்தார். அமைப்பு சாராத தொழிலாளர்களுக்காகச் செயல்பட்டுவரும் 17 நல வாரியங்கள் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 90 ஆயிரத்து 160 தொழிலாளர்களுக்கு 18 கோடியே 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவியாக அளிக்கப்பட்டுள்ளது என்று லிங்கேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

‘காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு 1 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி உதவி’ மத்திய அரசு

மேலும் 23,327 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 4 கோடியே 66 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்; 16,710 தையல் தொழிலாளர்களுக்கு 3 கோடியே 34 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்; 23,228 நடைபாதை வியாபாரிகள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 4 கோடியே 64 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்; 5731 உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு 1 கோடியே 14 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மற்றும் 5494 வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 1 கோடியே 9 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குனர் அலுவலகம் மூலமாக நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் இதேபோல் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.