கொரோனா தளர்வுகள் – 29ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

 

கொரோனா தளர்வுகள் – 29ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா தளர்வுகள் குறித்து வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவ தொடங்கியது. இதனால் சுமார் 3 கோடி பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை வருங்காலங்களில் தடுக்க இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு கடந்த 19 ஆம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தளர்வுகள் – 29ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் முன்பை விட கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உருமாறிய கொரோனா பரவ தொடங்கியதால் மக்கள் முன்பை விட எச்சரிக்கையாக இருக்க, சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

கொரோனா தளர்வுகள் – 29ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தளர்வுகள் குறித்து வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தாக்கம் பற்றி மருத்துவர்களின் கருத்துக்களை கேட்டறிவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.