15 கோடி குழந்தைகளை வறுமைக்குள் தள்ளிய கொரோனா

15 கோடி குழந்தைகளை வறுமைக்குள் தள்ளிய கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா பேரிடரில் சிக்கித் தவிக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய நோயாளிகள் அதிகரிப்பதும் மரணமடைபவர்களும் அதிகரித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 3 லட்சத்து  51 ஆயிரத்து 589 பேர்.    கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 314 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 50 ஆயிரத்து 555 பேர்.  தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 73,59,720 பேர்.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 68,74,596 பேரும், இந்தியாவில் 52,14,677 பேரும், பிரேசில் நாட்டில்  44,57,443 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

15 கோடி குழந்தைகளை வறுமைக்குள் தள்ளிய கொரோனா

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 68,74,596 பேரும், இந்தியாவில் 52,14,677 பேரும், பிரேசில் நாட்டில்  44,57,443 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் 46,295 பேரும், பிரேசிலில் 35,757 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 96,793 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.

கொரோனாவினால் கோடிக்கணக்கில் வேலை இழப்புகளை உலகம் முழுக்க உள்ள மனிதர்கள் சந்தித்து வருகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் கொரோனாவின் பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

15 கோடி குழந்தைகளை வறுமைக்குள் தள்ளிய கொரோனா

இந்நிலையில் யுனிசெஃப் அளித்திருக்கும் ஒரு தகவல் நம்மை அதிர வைக்கிறது. பல்வேறு நாடுகளில் யுனிசெஃப் ஆய்வுகள் மேற்கொண்டன. தொடர்ந்து கொரோனா பேரிடரின் இடர்பாடுகளை நீக்க யுனிசெஃப் முடிந்தளவு உதவி வருகிறது.

யுனிசெஃபின் ஆய்வில் 70 நாடுகளுக்கு மேல் கருத்துகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இதில் சுமார் 15 கோடிக் குழந்தைகள் வறுமையால் சிக்கித் தவிக்கின்றனர் என்றும், அதற்கு காரணம் கொரோனா நோய்த் தொற்றும் அதன் பின் விளைவுகளும்தான் என்று தெரிவித்திருக்கிறது.