கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

 

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆரம்பக்கட்டத்தில் ஒரே நாளில் 7,000 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 1000 என்ற அளவிலேயே இருக்கிறது. இருப்பினும், கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்காத வண்ணம் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

அண்மையில் பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியானது. அங்கிருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்திருந்தார். இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மீண்டும் தளர்வுகளை கடுமையாக்குவதா? அல்லது மேலும் தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்து நாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். அக்கூட்டத்தில், ஆன்லைன் பட்டா வழங்கும் திட்டம், காப்பீடு திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.