கொரோனா கால பொங்கல் பண்டிகை – எதிர்கொள்ள தயாராக இருக்கிறதா தமிழக அரசு?

 

கொரோனா கால பொங்கல் பண்டிகை – எதிர்கொள்ள தயாராக இருக்கிறதா தமிழக அரசு?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அதன் பாதிப்பு அதிகரித்தே வருகிறது. உலகளவில் அதிக கொரோனா தொற்றுக்குள்ளான நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதிக மரணங்கள் நடந்த நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. ஆயினும் கடந்த ஒரு மாதமாக புதிய நோய்த் தொற்று எண்ணிக்கை இறங்கு முகத்தில் இருக்கிறது. இது ஆறுதலான செய்தியே.

இந்திய அளவில் பார்க்கையில் தமிழ்நாடு அதிகப் பாதிப்புகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று. அதனால்தான் தீபாவளி பண்டிகையின்போது அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அப்போது கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் பொதுமக்களும் ஓரளவு அக்கறையுடன் நடந்துகொண்டனர்.

கொரோனா கால பொங்கல் பண்டிகை – எதிர்கொள்ள தயாராக இருக்கிறதா தமிழக அரசு?

ஆனால், தற்போது தினமும் 1000 புதிய கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர் தமிழ்நாட்டில். இன்னும் ஒரு வாரங்களில் பொங்கல் பண்டிகை வருகிறது. தீபாவளியை விட சிறப்பாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் கொண்டாடப்படும். அதனால், பெரு நகரங்களில் வசிப்போர் கிராமம் நோக்கி பயணிப்பார்கள். அதனால், எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்.

கேரளாவில் தொடக்கத்தில் அதிகரித்த கொரோனாவைக் கட்டுப்படுத்தியது அம்மாநில அரசு. ஆனால், ஓணம் பண்டிகைக்குப் பின் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா தொற்று இன்று வரை கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்றைய நிலவரப்படி மாநிலங்களின் பட்டியலில் புதிய நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மாநிலம் கேரளாதான்.

கொரோனா கால பொங்கல் பண்டிகை – எதிர்கொள்ள தயாராக இருக்கிறதா தமிழக அரசு?

இந்நிலை தமிழ்நாட்டுக்கு வந்துவிடக்கூடாது எனில், தீபாவளிக்கு விதிக்கப்பட்ட தடைகளைப் போல பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும். வெளியூர் செல்லும் பேருந்துகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஏனெனில், தமிழ்நாடும், புதிய நோய்த் தொற்று, மரணங்கள் ஆகியவற்றின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தினமும் இடம்பெற்றுவிடுகிறது. அதனால் அதிகாரிகள் விழிப்போடு பண்டிகையை எதிர்கொள்ள வேண்டியவற்றைச் செய்வது அவசியமாகிறது. இல்லையெனில் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இறங்குமுகத்தில் இருக்கும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கி விடும்.

பண்டிகைக்கால முன்னெச்சரிக்கை ஆயத்த பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்குமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.