எல்லா மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு 10%க்கு கீழ் குறைந்துள்ளது: அமைச்சர் தகவல்!

 

எல்லா மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு 10%க்கு கீழ் குறைந்துள்ளது: அமைச்சர் தகவல்!

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் சூழலிலும், மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டது. கடந்த 1 ஆம் தேதி முதல் மால்கள், பூங்காக்கள், கோவில்கள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்தது. மக்கள் கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால், அரசின் உத்தரவை மீறி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

எல்லா மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு 10%க்கு கீழ் குறைந்துள்ளது: அமைச்சர் தகவல்!

மாஸ்க் அணியாமலோ, தனிநபர் இடைவெளி பின்பற்றாமல் இருந்தாலோ ஒரு நபருக்கு ரூ.500 அபரதாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சற்று விழுப்புணர்வுடன் பொது இடங்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதன்முறையாக எல்லா மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு விகிதம் 10%-க்கு கீழ் குறைந்துள்ளது என தெரிவித்தார்.