கேரளாவில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த இருவர் தூக்கிட்டு தற்கொலை!

 

கேரளாவில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த இருவர் தூக்கிட்டு தற்கொலை!

இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. கேரளாவில் இன்று மேலும் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 34 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 25 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். கேரளாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 1,231 ல் இருந்து 1,238 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 2,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த இருவர் தூக்கிட்டு தற்கொலை!

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஆனாடு பகுதியை சேர்ந்த உண்ணி என்பவர் இன்று காலையில் மருத்துவமனையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாலை அதே மருத்துவமனையில் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த முருகேசன்(38) என்பவர் தூக்குப்போட்டு தற்க்கொலை செய்துள்ளார். இருவரும் சிகிச்சையின் போது தற்கொலை செய்து கொண்டதால் விசாரணைக்கு உட்படுத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.