மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை!

பஞ்சாபில் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து கரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூலை 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 17லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதித்தவர்கள் மட்டுமின்றி அதனால் ஏற்படும் மன உளைச்சலால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவம் இன்று பஞ்சாபிலும் அரங்கேறியுள்ளது.

தலைநகர் சண்டிகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 62 வயது நபர் ஒருவர் கடந்த 31 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த அந்த நபர், இன்று மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொணார். இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் எலும்புமுறிவு ஏற்பட்டு, தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது இதனையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Most Popular

திருப்பதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பொது முடக்க தளர்வுகளின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கோவில் ஊழியர்கள் முதல்...

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு கிடந்த உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும்...

சிறிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி!

சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வீரியம் குறைந்து வருகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு வருகிறது. அதன்...

“பாலில் மருந்து பிறகு பலருக்கு விருந்து” பிரபல அனாதை இல்லத்தில் பெண்கள் பலாத்காரம் -பதினாலு வயது பெண் மூலம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி அனாதை இல்லம் இயங்கி வந்தது .இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள் .அந்த அனாதை இல்லத்தை விஜயா...