சென்னையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

 

சென்னையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூலை 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இங்கு கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை 2 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதித்தவர்கள் மட்டுமின்றி அதனால் ஏற்படும் மன உளைச்சலால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவம் இன்று சென்னையிலும் அரங்கேறியுள்ளது.

சென்னையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போரூரை சேர்ந்த சம்பத் என்பவர், 7-வது மாடியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே பெருங்குடல் புற்றுநோய் இருந்த நிலையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்துள்ளார். மன அழுத்தம் காரணமாக சம்பத் தற்கொலை செய்துகொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.