மதுரையில் கொரோனா நோயாளியை காணவில்லை… பகீர் தகவல்!

 

மதுரையில் கொரோனா நோயாளியை காணவில்லை… பகீர் தகவல்!

தமிழகத்தில் அதிகமாக கொரோனா பாதித்த மாவட்டங்களுள் மதுரையும் ஒன்று. அங்கிருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. மதுரையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது தென்மாவட்டங்களில் இருந்து பிற நோயாளிகளும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மருத்துவ மேற்படிப்பு மாணவர்களும் சிகிச்சையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரையில் கொரோனா நோயாளியை காணவில்லை… பகீர் தகவல்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 12 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான கொரோனா நோயாளியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டியை சேர்ந்த 60 வயதான மூதாட்டி கொரோனா பாதிக்கப்பட்டு அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவர் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் உடனடியாக அண்ணாநகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அந்த மூதாட்டியை தேடி வருகின்றனர். அந்த மூதாட்டி மூலமாக பலருக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருப்பது மக்களை பீதியடையச் செய்துள்ளது.