கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில் உள்ள இஸ்ஐ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு திடீரென அங்கிருந்து மூதாட்டி கஸ்தூரி ஆட்டோவில் தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த எம்ஜிஆர் நகர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

அவரின் செல்போன் எண்ணை வைத்து எங்குள்ளார்? என போலீசார் தேடினர். விசாரணையில், ஆட்டோ மூலமாக நெய்வேலியில் இருக்கும் தனது மகளை மூதாட்டி கஸ்தூரி காண சென்றுள்ளார். சென்னையில் இருந்து ஆட்டோவிலேயே சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஓட்டுனரின் தொலைப்பேசி மூலமாக தனது மகளின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தான் அங்கு வருவதை கஸ்தூரி தெரிவித்துள்ளார். கொரோனா மையத்தில் மூதாட்டி கஸ்தூரி தொடர்பு எண்ணாக தனது மகளின் தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார். போலீசார் அவரை தொடர்பு கொண்ட போது, “அம்மா தன்னை பார்க்க ஆட்டோ மூலமாக வந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்து ஆட்டோ ஓட்டுனரின் தொலைப்பேசி எண்ணையும் கொடுத்துள்ளார். ஆட்டோ ஓட்டுனரிடம் தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்த கேகே நகர் போலீசார் திண்டிவனம் அருகே சென்று கொண்டு இருந்த அவர்களை சென்னை கொண்டு வந்தனர். சென்னை எம்ஜிஆர் நகர் மார்கெட் பகுதிக்கு வந்ததும் அந்த மூதாட்டி மீண்டும் தப்பியோடினார்.

போலீசார் மீண்டும் அந்த மூதாட்டி கஸ்தூரியை கண்டுபிடித்து கேகே நகர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனை கொரோனா மையத்தில் அனுமதித்தனர். கொரோனா தொற்றால் தான் இறந்து விடுவோமோ என்ற பயத்தில் தனது மகளை காண ஆட்டோவில் சென்றதாக கஸ்தூரி வாக்குமூலம் அளித்துள்ளார்.