கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் வார்டிலேயே தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

 

கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் வார்டிலேயே தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 17,000ஐன் கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க இடப் பாற்றாக்குறை இருப்பதால் நேரு உள் விளையாட்டு அரங்கம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்களை காக்க சென்னை மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகிறது.

கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் வார்டிலேயே தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளி அந்த வார்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த அந்த நபருக்கு வயது 50. அவருக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் ஸ்டான்லி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.