தனியார் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

 

தனியார் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

தேனி

தேனியில் உள்ள தனியார் கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள எண்டப்புளி பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (54). இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில், பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, நேற்ற காலை தேனி அரசு மருத்துவமனை அருகில் உள்ள தனியார் கொரோனா சிகிச்சை மையத்தில், ஜெயராஜ் அனுமதிக்கப்பட்டார்.

தனியார் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

அங்கு தனியறையில் தங்கவைக்கப்பட்டு, ஜெயராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, கொரோனா தொற்று ஏற்பட்டதால் மனமுடைந்த ஜெயராஜ், அறையில் இருந்த மின் விசிறியில் தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று மாலை துப்புரவு பணியாளர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது, கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, ஜெயராஜ் தூக்கிட்ட நிலையில் தொங்கினார்.

இதுகுறித்து ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், தேனி க.விலக்கு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜெயராஜை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஜெயராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.