கொரோனா எதிரொலி: ரூபாய் நோட்டு அச்சிடும் பணி நிறுத்தம்

 

கொரோனா எதிரொலி: ரூபாய் நோட்டு அச்சிடும் பணி நிறுத்தம்

உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா பரவல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இங்கு கொரோனாவின் இரண்டாம் அலை தீயாய் பரவிவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாகவுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,26,609 உயர்ந்துள்ளது.

கொரோனா எதிரொலி: ரூபாய் நோட்டு அச்சிடும் பணி நிறுத்தம்

இந்த சூழலில் மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்த ‘Break the Chain’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும், நாசிக் நாணய பாதுகாப்பு பதிப்பகம் மற்றும் இந்திய பாதுகாப்பு பதிப்பகமானது ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணியை இந்த மாதம் 30 வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.