கோவையிலும் ஆட்டம் காட்டும் கொரோனா… தீவிரமாக போராடும் மாவட்ட நிர்வாகம்

 

கோவையிலும் ஆட்டம் காட்டும் கொரோனா… தீவிரமாக போராடும் மாவட்ட நிர்வாகம்

கோவையில் தற்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயலாற்றி வருவது ஆறுதலை அளிக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கிய நிலையில் கோவையிலும் வேகமாக பரவியது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனாத் தொற்று பூஜ்ஜியம் என்ற நிலையை அடைந்தது. தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனாத் தொற்று இல்லை என்ற நிலை இருந்தது. இதனால் மற்ற மாவட்டத்தினர் கோவை ஏக்கத்துடன் பார்க்கும் நிலை இருந்தது.

கோவையிலும் ஆட்டம் காட்டும் கொரோனா… தீவிரமாக போராடும் மாவட்ட நிர்வாகம்தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவைக்கு பலரும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இதனால் கோவையில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையிலும் ஆட்டம் காட்டும் கொரோனா… தீவிரமாக போராடும் மாவட்ட நிர்வாகம்கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவை மாநகர எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. இ-பாஸ், முகக்கவசம் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். சென்னையிலிருந்து ஆட்களை அழைத்துவந்த நகைக்கடை ஒன்று சீல் வைக்கப்பட்டது. வணிகர்கள் தாங்களாக முன்வந்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளைத் திறப்பது என்று முடிவு செய்துள்ளனர்.
தனி மனித இடைவெளியின்றி செயல்படும் கடைகள், இயக்கப்படும் பஸ்கள் சீல் வைக்கப்படுகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கடை உரிமையாளர்கள், வாகன உரிமையாளர்களும் கவனத்துடன் செயல்படுகின்றனர். மக்கள் மத்தியில் ஒருவித பயம், பதற்றம் இருந்தாலும் கொரோனா விரைவில் காணாமல் போகும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.