இந்தியாவில் கொரோனா வேகமாக பரவவில்லை! – மத்திய அரசு விளக்கம்

 

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவவில்லை! – மத்திய அரசு விளக்கம்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், கொரோனா வேகமாக பரவவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவவில்லை! – மத்திய அரசு விளக்கம்இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்தது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிவேகமாக உள்ளதாக கருத்து நிலவுகிறது. ஆனால், இதை மத்திய சுகாதாரத் துறை மறுத்துள்ளது. “இந்தியாவில் கொரோனா வேகமாக பரவுகிறது என்ற தகவலில் உண்மை இல்லை.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவவில்லை! – மத்திய அரசு விளக்கம்இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கு ஆளாவோரின் எண்ணிக்கை, பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. உலக அளவில் 10 லட்சம் பேருக்கு சராசரியாக 1453 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 505 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவவில்லை! – மத்திய அரசு விளக்கம்இதுவே சிலியில் 10 லட்சம் மக்களுக்கு 15,459 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளது. அதே போல் கொரோனா உயிரிழப்புகளும் இந்தியாவில் குறைவு. 20 ஆயிரம் பேர் கொரோனா காரணமாக உயிரிழந்தாலும், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது குறைவுதான்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதால் தினமும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று கூறியுள்ளது.