சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா தீவிரம்…மாநகராட்சி எச்சரிக்கை!

 

சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா தீவிரம்…மாநகராட்சி எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 13ஆயிரத்து 502ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவால் இதுவரை 13,728 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா தீவிரம்…மாநகராட்சி எச்சரிக்கை!

இந்நிலையில் சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு, ராயபுரம் ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் தொற்று ஏற்பட்டுள்ளது.சென்னையில் மொத்தம் 31 ஆயிரத்து 142 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னையில் இதுவரை சுமார் 14 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். சராசரியாக 35 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு தடுப்பூசி போடுகின்றனர். சென்னையில் ஐந்து மண்டலங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் 3210 பேரும், அண்ணாநகரில் 3165 பேரும், கோடம்பாக்கத்தில் 2,935 பேரும் , அடையாரில் 2503 பேரும், ராயபுரத்தில் 2170 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 10க்கும் அதிகமான கொரோனா தொற்றுடைய நபர்களை கொண்ட தெருக்கள் 315 என கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையில் 6க்கும் அதிகமான கொரோனா தொற்றுடைய நபர்களை கொண்ட தெருக்கள் 295.சென்னையில் தற்போது 10 சதவீதம் பேர் சிகிச்சையிலும், 89 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் .உயிரிழப்பு விகிதம் 1.47 ஆக உள்ளது.